மானூர் அருகே குண்டர் சட்டத்தில் 4 வாலிபர்கள் கைது

மானூர், ஜன. 9: மானூர் அருகே குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர்கள் 4 பேர் கைதுெசய்யப்பட்டனர்.மானூர் அடுத்த பல்லிக்கோட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தெய்வநாயகம் (22) என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி இரவு மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் பல்லிக்கோட்டையைச் சேர்ந்த கணேசன் மகன் மாடசாமி (24) பேச்சி மகன் ஆறுமுகம்  (23) செல்லத்துரை மகன் பேராட்சி ரமேஸ் (19), சங்கரபாண்டி மகன் சிவா என்ற  பரமசிவன் (22) ஆகிய 4 பேரும் கைதாகி சிறையில் இருந்து வருகின்றனர்.இருப்பினும் இவர்கள் பெயரில் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் எஸ்பி அருண்சக்தி குமார், தாழையூத்து டி.எஸ்.பி. பொன்னரசு, மானூர் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் பரிந்துரையை ஏற்று கலெக்டர் ஷில்பா பிறப்பித்த  உத்தரவின்பேரில் 4 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

× RELATED ஒரு கிலோ தங்கத்துடன் 2 வாலிபர்கள் கைது