×

தூத்துக்குடியில் அமமுக நூதன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஜன. 9: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிபந்தனைகளின் அடிப்படையில் திறக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவுக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் ஆலை மீண்டும் திறக்கப்படலாம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசின் மெத்தனபோக்குதான் காரணம் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பு கிருஷ்ணமூர்த்தி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு உள்ளிட்டோர் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை ஓயமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். இதனிடையே ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு கொள்கை முடிவு எடுத்து சிறப்பு சட்டம் இயற்ற தமிழக அரசு மறுத்து ஆலைக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறது என குற்றம்சாட்டிய அமமுகவினர் தூத்துக்குடியில் கண்ணில் கருப்பு  துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 தெற்கு மாவட்ட கட்சி அலுவலகம் முன் நடந்த இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமை வகித்தார். எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைச்செயலாளர் பாலன், மீனவர் அணி இணைச் செயலாளர் சுகந்தி கோமஸ், மாவட்ட பொருளாளர் பிரைட்டர், தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் சிவதுரையரசன், துணைத் தலைவர் சண்முககுமாரி, துணைச் செயலாளர் ஸ்டீபன், மகளிர் அணி மாவட்டச் செயலாளர் அந்தோணி கிரேஸ், இணைச்செயலாளர் விஜயலட்சுமி பொன்ராஜ், பகுதி செயலாளர்கள் எட்வின் பாண்டியன், அசோக்குமார், பேரவை இணைச் செயலாளர் ராமச்சந்திரன், வர்த்தக பிரிவு துணைச் செயலாளர் தர்மராஜ், வட்ட செயலாளர்கள் சின்னசாமி, ஆறுமுகம், ஜமால், வீரபுத்திரன், சாமி, ராஜேந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : demonstration ,Amutham Nedana ,Thoothukudi ,
× RELATED ருச்செந்தூரில் விசிக ஆர்ப்பாட்டம்