×

மேலவாளாடியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்ககூடாது

திருச்சி, ஜன.8: மேலவாளாடியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கக்கூடாது இப்பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர். திருச்சி மாவட்டம் லால்குடி, அப்பாதுறை ஊராட்சி மேலவாளாடி, புதுக்குடி கிராமங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இரண்டு கிராமங்களுக்கு செல்ல லால்குடி மெயின் ரோட்டிலிருந்து ரயில்வே புதுப்பாலத்துக்கு கீழ் ரயில்வே டிராக்கை கடந்து செல்ல வேண்டும். மேலவாளாடியில் அரசு பள்ளியும், 2 ரேஷன் கடைகளும் உள்ளன. இக்கிராமத்தை சுற்றி 1,500 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. அலுவலகம், பள்ளி, வேளாண் பணி நிமித்தமாக செல்லும் மக்கள் ரயில்வே கேட்டை கடந்து பாலத்தின் அடிவாரத்துக்குத்தான் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. பல ஆண்டுகளாக பயன்பட்டு வந்த இந்த ரயில்வே கேட்டை மூடிவிட்டு ரெடிமேட் பாலம் அமைக்கப்போவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்து, அதற்கான ஆயத்த பணிகளை துவங்கி உள்ளது. ‘தற்போது பாதையை மூடிவிட்டால், இக்கிராமங்கள் தனித்தீவாகிவிடும். கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே மேலவாளாடி, புதுக்குடி கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மேலவாளாடியில் ரெடிமேட் பாலம் அமைக்கும் முடிவை கைவிட்டு, ரயில்வே கேட்டை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’ என அப்பகுதி மக்கள் கலெக்டர் ராஜாமணியிடம் கோரிக்கை மனு அளித்தனர். கலெக்டரிடம் கிராமமக்கள் மனு கொடுத்தனர்

Tags : Railway tunnel ,Mayawala ,
× RELATED கத்தி முனையில் மிரட்டி வடமாநில...