×

பரமத்தி பேரூராட்சியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு கூட்டம்

பரமத்திவேலூர், ஜன.8: பரமத்திவேலூர் பேரூராட்சி சமுதாயக்கூட மண்டபத்தில் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். சேலம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் முருகன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி அசின்பானு, வழக்கறிஞர் கேசவன், வழக்கறிஞர் சங்க பொருளாளர் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள், மாற்று பொருட்கள் பயன்பாடு மற்றும் பிளாஸ்டிக் கேரிபேக் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து நீதிபதி பேசினார். இந்த கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் பரமத்தி ராஜசேகரன், வேலூர் ரவிக்குமார், படைவீடு ஆறுமுகம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். நீதிபதி அசின்பானு முன்னிலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


Tags : meeting ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...