×

திருச்சுழி பகுதியில் ஜல்லி, கிரசர் லாரிகளால் விபத்து அபாயம்

திருச்சுழி, ஜன.8:    திருச்சுழி பகுதியில் குறிப்பிட்ட அளவைவிட அதிகளவில் லாரிகளில் ஜல்லிக் கற்களை ஏற்றி அதிவேகமாகவும் செல்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்திற்கும் வழிவகுப்பதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வரை நான்குவழிச் சாலையாகவும், விருதுநகர் மாவட்ட கடைக்கோடி எல்கையான ம.சாலையிலிருந்து திருச்சுழி வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் வரை சாலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஜல்லி உள்ளிட்ட பொருட்களை திருச்சுழி பகுதியில் குவாரி அமைத்து வேலை நடைபெறும் இடத்திற்கு லாரிகளில் தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு வந்து செல்லும் லாரிகள் அதிவேகமாக செல்வதோடு, மற்ற வாகனங்களை முந்திச் செல்வதும், பின்னால் வரும் வாகனங்களுக்கு வழிவிடாமலும் போட்டி ஏற்பட்டு அதிவேகத்தில் செல்கின்றனர்.

மக்கள் அதிகளவில் நடமாடும் நரிக்குடி, திருச்சுழி பஸ் ஸ்டாண்டிலும், பயணிகள் காத்திருக்கும் பஸ் ஸ்டாப் பகுதிகளிலும் அசுர வேகத்தில் செல்வதால், பலர் மயிரிழையில் உயிர் தப்பி உள்ளனர்.வேகமாக செல்லும் லாரிகள் பலமுறை கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவமும் நடந்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்கின்றனர்.இதுதவிர இந்த லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவினை விட கூடுதலாக ஜல்லி, கிரசர் தூசி உள்ளிட்டவைகளை ஏற்றிச் செல்வதோடு, தார்பாய் கொண்டு    மூடாமல் திறந்த நிலையில் கொண்டு செல்வதால் தூசிகள் பறந்து பின்னால் டூவீலர் மற்றும் மற்ற வாகனங்களில் செல்பவர்களை விபத்தில் சிக்க வருகின்றனர்.எனவே வட்டார போக்குவரத்து துறையினர் இத்தகைய லாரிகளை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும்.    ஆனால் அதிகாரிகளுக்கு தெரிந்தேதான் இந்த விதிமுறை மீறப்படுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags : accident ,Kisar ,Jalli ,area ,Tiruchuri ,
× RELATED மின்விளக்குகள் எரியாத புதிய மேம்பாலம்: பெரியபாளையம் அருகே விபத்து அபாயம்