×

திருப்புத்தூரில் நாளை மின்தடை

திருப்புத்தூர், ஜன.8: திருப்புத்தூர் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். இதனால் நாளை திருப்புத்தூர், கீழச்செவல்பட்டி, பிள்ளையார்பட்டி, கருப்பூர், தென்கரை, திருக்கோஷ்டியூர், மல்லாக்கோட்டை மற்றும் இவைகளின் சுற்றுவட்டார கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை திருப்புத்தூர் துணை மின்நிலையத்தின் செயற்பொறியாளர் பாட்ஷா முகமது தெரிவித்துள்ளார்.




Tags : resignation ,
× RELATED குஜராத்தில் காங். எம்எல்ஏ திடீர் ராஜினாமா