×

இன்சூரன்ஸ் பதிவில் மோசடி திமுக முற்றுகை நடத்த முடிவு

சிவகங்கை, ஜன.8: சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் இன்சூரன்ஸ் பதிவில் மேசாடி நடந்துள்ளதை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை திமுக நகர செயலாளர் துரைஆனந்த் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் அளித்துள்ள மனுவில், ‘‘நாட்டரசன்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 2017-2018ம் ஆண்டிற்கான பயிர் இன்சூரன்ஸ் பதிவில் இந்த கடன் சங்கத்தின் வரையறைக்குள் வராத நிலங்களை போலியாக காண்பித்து பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்துள்ளனர். மேலும் இரட்டை பதிவும் செய்துள்ளனர். கூட்டுறவு சங்க பதிவாளரின் உத்தரவை மீறி வங்கி நிர்வாகத்தில் உள்ளவர்கள், அவர்களின் உறவினர்கள் பெயர்களில் மோசடியாக இன்சூரன்ஸ் பதிவு செய்துள்ளனர். இதுபோல் பயிர்க்கடன், விவசாய நகைக்கடன் பெறுவதிலும் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 2016-2017ம் ஆண்டு பயிர் இன்சூரன்ஸ் பதிவிலும் முறைகேடு நடத்துள்ளதாக புகார் அனுப்பப்பட்டுள்ளது. எனவே இரண்டு ஆண்டுகளிலும் நடைபெற்ற முறைகேடுகள் மீது 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : insurer ,siege ,DMK ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்