×

கொடைக்கானலில் பொங்கல் பரிசு வாங்க வந்தவர்களுக்கு ‘அல்வா’

கொடைக்கானல், ஜன. 8: கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் பொங்கல் பரிசு வழங்காததால் ெபாதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். தமிழக அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக அரிசி, வெல்லம், கருப்பு உள்ளிட்ட பொருட்களுடன் ரூ.1000 பணம் நேற்று முதல் வழங்கப்படும் என அறிவித்தது. இவற்றை வாங்க நேற்று காலையிலே கொடைக்கானலில் உள்ள ரேஷன்கடைகளில் பொதுமக்கள் கூடினர். நகர்பகுதியில் விநியோகம் துவங்கி விட்டாலும் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, பூண்டி, மன்னவனூர், கவுஞ்சி, போளூர், கிளாவரை பகுதிகளில் பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை.

மேலும் பல இடங்களில் ரேஷன் கடைகள் திறக்கப்படாமல் மூடியே கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுபற்றி கேட்டால் பொங்கல் பரிசு பொருட்கள் முழுமையாக வந்து சேராததால் விநியோகிக்கவில்லை என கூறப்படுகி
றது. இதுகுறித்து கொடைக்கானல் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஸ்ரீதரிடம் கேட்டபோது, ‘‘கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வந்து சேர்வதற்கு மலைப்பகுதி என்பதால் காலதாமதம் ஆகிவிட்டது. நகர் பகுதிகளில் பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகம் துவங்கி விட்டது. மேல்மலை பகுதிகளில் இன்று முதல் விநியோகிக்கப்படும்’’ என்றார்.


Tags : Pongal ,Kodaikanal ,Alva ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்