×

வாகன சோதனையில் 364 மதுபாட்டில்கள் காருடன் பறிமுதல்

சீர்காழி, ஜன.8: சீர்காழி அருகே நடந்த வாகன சோதனையில் கடத்தி வரப்பட்ட 364 மதுபாட்டில்கள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டன.நாகை மாவட்டம் சீர்காழி அருகே தென்னலக்குடியில் நாகை எஸ்.பி விஜயகுமார் உத்திரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரைக்காலில் இருந்து சீர்காழி நோக்கி வந்த காரை தடுத்துநிறுத்தி சோதனை செய்தபோது, காரில் 110லி சாராயம், 750 மி.லி அளவு கொண்ட 174 மதுபாட்டில்கள், 180மி.லி அளவுள்ள 190 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காரை ஓட்டிவந்த காரைக்கால் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஜகன்நாதன் மகன் சுகுமார் (38), முத்துக்குமார் மனைவி சுவர்ணலதா (34) ஆகியோரை கைது செய்தனர். மேலும், கடத்திவரப்பட்ட மது பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED செம்பனார்கோவில் அடுத்த ஆக்கூர்...