×

போலீஸ் நிலையங்களில் நிலப்பிரச்னைகளை விசாரிக்க கூடாது : நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் எச்சரிக்கை

வேலூர், ஜன.8: போலீஸ் நிலையங்களில் நிலப்பிரச்னைகளை விசாரிக்க கூடாது என்று நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.தமிழகத்தில் நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க கடந்த 2011ம் ஆண்டு தனிப்பிரிவு தொடங்கப்பட்டது. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் ஒரு சில போலீஸ் நிலையங்களில் நிலம் சம்பந்தமான வழக்குகளில் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுதொடர்பாக, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கும் புகார்கள் வந்துள்ளது. எனவே, போலீஸ் நிலையங்களில் நிலப்பிரச்னைகளை விசாரிக்க கூடாது என்று நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில், ‘போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகளை மட்டுமே விசாரிக்க வேண்டும். நிலம் அபகரிப்பு, நில மோசடி உள்ளிட்ட சிவில் பிரச்னைகள் தொடர்பாக விசாரிக்க நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதுநிலம் சம்பந்தமான பிரச்னைகளில் ஏற்படும் குற்ற சம்பவங்களை போலீசார் வழக்காக பதிவு செய்து விசாரிக்கலாம். ஆனால், ஒரு சிலர் நிலம் சம்பந்தமான பிரச்னைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக புகார்கள் வந்துள்ளது. நிலம் சம்பந்தமான பிரச்னைகளில் போலீசார் ஒருதலை பட்சமாக செயல்பட்டு யாருக்கும் தொல்லை கொடுக்கக்கூடாது. பொதுமக்களும் நிலம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு நீதிமன்றத்தையோ, நில அபகரிப்பு தடுப்பு பிரிவையோ அணுகலாம்’ என்றனர்.

Tags : landlords ,land ,police stations ,unit ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!