×

வாடிப்பட்டியில் வீரபாண்டிய கட்ட பொம்மன் பிறந்தநாள் விழா

வாடிப்பட்டி, ஜன. 4: வாடிப்பட்டி நாயுடு மகாஜன சங்கம் சார்பாக வாடிப்பட்டியில் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 260வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு சங்கதலைவர் பொன்கமலகண்ணன் என்ற சதீஸ் தலைமை வகித்தார். செயலாளர் பொன்னுசாமி, கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரும்பாடி ராஜேந்திரன் வரவேற்றார். மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சங்க நிர்வாகிகள் புருசோத்தமன், குப்புசாமி, விஜயக்குமார் உள்படபலர் கலந்துகொண்டனர். கோவிந்தன் நன்றி கூறினார்.

Tags : Weird Day Festival ,
× RELATED மதுரையில் வாலிபர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு