×

மருதூர் வடக்கு கிராமத்தில் நிவாரணம் கேட்டு மக்கள் உண்ணாவிரதம்

வேதாரண்யம், ஜன.4: வேதாரண்யம் தாலுகா மருதூர் வடக்கு கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டதற்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள்  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா மருதூர் வடக்கில் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் புயல் பாதித்த இப்பகுதிகளுக்கு அரசு அறிவித்த நிவாரணம் இன்னும் சரிவர கிடைக்கவில்லையாம்.

எனவே அரசு அறிவித்த நிவாரண தொகை போர்கால அடிப்படையில் வழங்க வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் ரூ.10,000 வழங்க வேண்டும். அனைத்து பகுதிக்கும் மின் வசதி ஏற்படுத்த வேண்டும். புயல் பாதித்த அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். மகளிர் குழுக்கள் பெற்ற அனைத்து தரப்பு கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என வளியுறுத்தி மருதூர் வடக்கு கிராம அலுவலர் அலுவலகம் முன் பொதுமக்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வருவாய் துறையினரும், போலீசாரும் போச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்தில் நிவாரணம் அனைவருக்கும் வழங்கபடும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : village ,Maruthur ,
× RELATED பைக், டிராக்டர் நேருக்கு நேர் மோதி...