×

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் காணொளி மூலம் இன்று குறைகேட்பு கலெக்டர் தகவல்

காரைக்கால், ஜன.4: காரைக்கால் கலெக்டர் கேசவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, தினசரி மாலை 5 மணி முதல் 6 மணி வரை புதுச்சேரியில் உள்ள தனது அலுவலகத்தில் மக்கள் குறைகளை கேட்டு வருகிறார். அதேபோல், காரைக்கால் மாவட்ட மக்களிடம் காணொலி மூலம் குறைகள் கேட்டறியும் நிகழ்வு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 5 முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்று வருகிறது. இன்று (4ம் தேதி) இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து, அதற்கு தீர்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறைகள் தெரிவிக்க விரும்புவோர், இன்று (4ம் தேதி) காலை 10 முதல் மாலை 3 மணி வரை கலெக்டர் அலுவலகத்தில், புகார்களை எழுத்து வடிவில் கொண்டுவந்து முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Puducherry ,Deputy Assistant Governor ,Videocon ,Collector ,
× RELATED புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.வி.க. போராட்டம்..!!