மதுராந்தகம், ஜன.3: எரிசாராயம் விற்றவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.செய்யூர் அடுத்த ஓதியூர் கிராமத்தை சேர்ந்தவர் பலராமன் (42). இவர் அதே பகுதியில் தொடர்ந்து கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து மதுராந்தகம் மது ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் நேற்று ஒதியூரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பலராமன் சாராய விற்பனையில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது.சோதனையில் அவரிடம் இருந்து 3 கேன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 105 லிட்டர் எரிசாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவர் மீது இதேபோன்று பல வழக்குகள் உள்ளதாலும் தொடர்ந்தவர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவதால் அவர் ஒரு வருடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
