சவ ஊர்வலத்தில் ஹாரன் அடித்ததால் பேருந்து கண்ணாடியை உடைத்த இருவர் கைது

காசிமேடு, ஜன. 3: சவ ஊர்வலத்தின் நடுவே ஹாரன் அடித்து சென்றதால் கற்களை வீசி மாநகர பேருந்து கண்ணாடியை  உடைத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.சென்னை மணலியில் இருந்து பாரிமுனைக்கு மாநகர பஸ் (தஎ 56டி) இயக்கப்படுகிறது. இதில் தினமும் ஏராளமான  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என  ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர்.நேற்று மதியம் மாநகர பஸ் பாரிமுனை நோக்கி புறப்பட்டது. திருவொற்றியூர் கலைஞர் நகரை சேர்ந்த டிரைவர்  மணிகண்டன் (32) பணியில் இருந்தார். காசிமேடு அருகே ஜீவரத்தினம் சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது சாலையில் சவ ஊர்வலம் சென்றது. பஸ் டிரைவர் மணிகண்டன் ஹாரன் அடித்து கொண்டு சென்றார்.  

இதனால், சவ ஊர்வலத்தில் கலந்து கொண்ட 2 பேர் ஆத்திரம் அடைந்து சாலையில் இருந்த கற்களை எடுத்து பேருந்து மீது  வீசினர். இதில், பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.இதுகுறித்து டிரைவர் மணிகண்டன் காசிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்தனர். அதில் பஸ் கண்ணாடியை உடைத்தது கொருக்குப்பேட்டை ஆரணி ரங்கன் தெருவை சேர்ந்த இசக்கியன்  (19), தண்டையார்பேட்டை இளையமுதலி தெருவை சேர்ந்த சாந்தகுமார் (20) ஆகியோர் என தெரிந்தது. இதையடுத்து,  2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

× RELATED குண்டாஸில் 2 வாலிபர்கள் கைது