×

முன்னாள் மத்திய அமைச்சரிடம் குறுந்தொழில் அமைப்புகள் மனு

கோவை, டிச.28: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சென்னையில் நடத்திய தொழிற்துறையினருடனான கருத்து கேட்பு கூட்டத்தில், கோவை தொழில் அமைப்பினர் பங்கேற்று கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது குறித்து கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) பொது செயலாளர் சிவக்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சென்னையில் தொழிற்துறையினருடன் கலந்துரையாடல் மற்றும் கருத்து கேட்பு கூட்டத்தை கடந்த 19ம் தேதி நடத்தினார். இதில் காட்மா உள்பட பல்வேறு குறுந்தொழில் அமைப்புகள் பங்கேற்று கோரிக்கை மனு அளித்தோம்.

அதில், இன்ஜினியரிங் ஜாப் ஒர்க் மீதான 18 சதவீத வரியை 5 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும். ரூ.20 லட்சத்திற்கு கீழ் உற்பத்தி செய்பவர்கள் ஜிஎஸ்டியில் பதிவு செய்ய வேண்டியதில்லை, என்று அரசு அறிவித்தாலும், பதிவு செய்தால் தான் ஜாப் ஒர்க் கிடைக்கும் நிலை உள்ளது. இதனால், ரூ.20 லட்சத்திற்கு கீழ் உள்ள ஜாப் ஒர்க்கிற்கு ஜிஎஸ்டியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். ஜாப் ஒர்க் மூலம் சப்ளை செய்யப்படும் பொருள்களுக்கு உரிய கூலி கிடைக்க 3 மாதம் முதல் 4 மாதம் வரை ஆகிறது. இதனால் மாதம்தோறும் ஜிஎஸ்டி வரி செலுத்துவது காலதாமதமாகிறது. ஜிஎஸ்டி வரி செலுத்த 3 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும். இத்தகைய கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Ministries ,Union Minister ,
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...