×

கனகு, சத்தி. வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை

ஈரோடு, டிச. 28:ஈரோடு மாவட்டத்தில் 2 பெண்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.ஈரோடு  மாவட்டம் பெரிய வீரசங்கிலி விரியன்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்த  வெள்ளியங்கிரி (38). விசைத்தறி உரிமையாளர். இவரது மனைவி  சுமதி (36).  வெள்ளியங்கிரிக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், மனைவியின் பெற்றோரிடம்  பணம் பெற்று வருமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால்,  மனவேதனையில் இருந்த சுமதி கடந்த 24ம் தேதி வீட்டில் விஷம் குடித்து  தற்கொலைக்கு முயன்றார். அக்கம், பக்கத்தினர் சுமதியை மீட்டு பெருந்துறை  அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல்  சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை  பலனின்றி கடந்த 25ம் தேதி இறந்தார். சுமதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே  ஆனதால் பெருந்துறை ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.

 இதேபோல், ஈரோடு  மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதி தாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த  பிரபாகர் மனைவி ஜோதி(35). இவர் தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்தார்.  ஜோதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.  இதில் 2வது மகளுக்கு பூப்பு நன்னீராட்டு  விழா கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது. இதற்கு ஜோதியின் உறவினர்கள்  யாரும் வரவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த ஜோதி நேற்று முன்தினம் விஷம்  குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Canon ,incidents ,women suicide ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 6 வழிப்பறி...