×

ரயில்வே கேட்டை கடக்க மேம்பாலம் கட்டுங்க! எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள்

ஈரோடு, டிச. 28:  வெண்டிபாளையத்தில் இரண்டு ரயில்வே கேட்களை கடக்க இந்த ஆண்டிலாவது மேம்பாலம் கட்டப்படுமா என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஈரோடு பழைய கரூர் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் இருண்டு ரயில்வே கேட் (கிராசிங்குகள்) உள்ளன. இதன் வழியாக ஈரோட்டில் இருந்து சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து ஈரோடு மார்க்கமாக கோவை மற்றும் கேரளாவிற்கு பல்வேறு ரயில் தினமும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் அனைத்தும் இந்த 2 ரயில்வே கேட் வழியாக சுமார் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை கடந்து செல்கின்றன. இந்த இரு கேட்டுகளின் இடைப்பட்ட பகுதியில்தான் வெண்டிபாளையம், மோளகவுண்டன்பாளையம், லோகநாதபுரம் உள்ளிட்ட ஊர்கள் உள்ளன. மேலும் இந்த ரோட்டின் வழியாக ஈரோட்டிலிருந்து கரூர், நாமக்கல், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து ஈரோட்டிற்கும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து ரக வாகனங்களும் சென்று வருகின்றன.

இந்த 2 ரயில்வே கேட்டை ரயில்கள் கடந்து செல்லும்போது, கேட் சுமார் 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை மூடப்படுகிறது. இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.மேலும், இந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்வதில் கால தாமதமாகிறது. இதேபோல் இப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் தினமும் பணிக்கு செல்ல ரயில்வே கேட் போடப்பட்டு விடுமோ என்ற அச்சத்திலேயே சென்று வருகின்றனர். மேலும், இப்பகுதி மக்களுக்கு ஏதேனும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ்கூட ரயில்வே கேட் இருப்பதால் குறித்த நேரத்திற்கு ஊருக்குள் வர முடியவில்லை. இதே நிலைதான் பல ஆண்டுகளாக தொடர்கிறது. இப் பிரச்னைக்கு ஒரே தீர்வு ரயில்வே கேட் பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே மேலாளராக இருந்த ஹரிசங்கர் வர்மா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்து பழைய கரூர் ரோட்டில் உள்ள ரயில் கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு விட்டது என்றும், மேம்பாலம் மற்றும் சுரங்க பாலம் அமைக்க மத்திய அரசு நிதி தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், பாலம் கட்டுவதற்கு மாநில அரசின் பங்களிப்பு வேண்டும் என்பதால் தமிழக முதல்வருக்கு பரிந்துரையை செய்துள்ளதாக கூறினார். ஆனால், அவர் சொல்லி பல மாதம் கடந்து விட்டது. ஆனால் பாலம் கட்ட எந்த நடவடிக்கையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது சேலம் கோட்ட ரயில்வே மேலாளராக சுப்பாராவ் பொறுப்பேற்றுள்ளார். இந்த ஆண்டிலாவது பழைய கரூர் ரோட்டில் உள்ள 2 ரயில்வே கேட்டுகளை கடந்து செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். மணல் கடத்திய
பொக்லைன் பறிமுதல் சென்னிமலை, டிச.28: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த தோப்புபாளையம் பகுதியில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

 சென்னிமலை வனப்பகுதிகளில் இரவு நேரத்தில் மணல் கடத்துவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இைதயடுத்து வருவாய் அலுவலர் தினேஷ் மணல் கடத்தும் கும்பலை தொடர்ந்து கண்காணித்து வந்தார். நேற்று முன் தினம் அதிகாலை தோப்புபாளையம் வன பகுதியில் பொக்கலைன் இயந்திரம் நின்று கொண்டு இருந்தது. ஆனால், அங்கு லாரிகள் எதுவும் இல்லை. விசாரணையில் மண் கடத்தலுக்கு இந்த வாகனம் பயன்படுத்தியது தெரியவந்தது. இதன் உரிமையாளர் விஜயமங்களம் பகுதியை சார்ந்த செல்வம் என தெரியவந்தது. வாகனத்தை பறிமுதல் செய்த வருவாய் அலுவலர் தினேஷ், பெருந்துறை வட்டாச்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். பின்னர், கோட்டாட்சியருக்கு அபராதம் விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

Tags : Beyond Railway Gate Waiting ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது