×

புதுகை புதுக்குளம் நடைபாதையில் தெரு விளக்குகளை சீரமைக்க கோரி மெழுகுவர்த்தியேந்தி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, டிச.28:  புதுகை புதுக்குளம் நடைபாதையில் உள்ள  தெருவிளக்குகளை சீரமைக்க கோரி மெழுகுவர்த்தியேந்தி நடை பயிற்சியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  புதுக்கோட்டை புதுக்குளத்தில் தூய்மை பணிகளை  மேற்கொள்ள வேண்டும். புதுக்குளத்தில் சமூக விரோத செயல்களை தடுத்து நிறுத்த  வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று  மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே புதுக்குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கஜா புயல் தாக்கியதில் மரங்கள் மற்றும் தெருவிளக்குகள் முற்றிலும் சேதமடைந்தன. ஆனால் தற்போது குளத்தின் கரையில் உள்ள சாய்ந்த மரங்கள் மட்டும் வெட்டி அகற்றப்பட்டன. ஆனால், இதுநாள் தெருவிளக்குகள் சீரமைக்கப்படவில்லை. இதனால் புதுக்குளம் பகுதி இருளில் முழ்கியது. இந்நிலையில் புதுக்குளம் நடைபயிற்சியாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபாதையில் உள்ள தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும். புதுக்குளத்தில் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். புதுக்குளத்தில் சமூக விரோத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் தலைவர் நைனாமுகமது தலைமை வகித்தார். இதில் நடைபயிற்சியாளர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags : candlelight demonstration ,
× RELATED உயரழுத்த மின் விநியோகத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்