×

ஆதாரங்களுடன் வந்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி விண்ணப்பம் பாதயாத்திரை பக்தர்கள் நலன்வேண்டி பழநியில் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு ஹோமம்

பழநி, டிச. 28: பழநி மலைக்கோயில் ஆனந்த விநாயகருக்கு பாதயாத்திரை பக்தர்கள் நலன்வேண்டி நேற்று சிறப்பு ஹோமம் நடந்தது. அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 20 லட்சத்திற்கும் அதிமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம். இவ்விழா வரும் ஜனவரி 15ம் தேதி துவங்க உள்ளது. எனினும், அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக தற்போதே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.இவ்வாறு வரும் பக்தர்களின் நலனிற்காக பழநி கோயிலில் உள்ள 4 காவல் தெய்வங்களுக்கும் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி நேற்று பழநி மலைக்கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கணபதி ஹோமம் மற்றும் அனுமதி பூஜை நடந்தது. புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் உள்ள கலசத்தை வைத்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பின், யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரைக் கொண்டு ஆனந்தவிநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 16 வகை அபிஷேகங்களும், வெள்ளி காப்பு அலங்காரம் நடந்தது.நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், உபயதாரர் கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Anantha Vinayaka ,Homam ,devotees ,
× RELATED பொன்னமராவதி அருகே சூரப்பட்டி தாதையா கோயில் கும்பாபிஷேகம்