×

‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் வாறுகால் அடைப்பால் தெருக்களில் தேங்கும் கழிவுநீர்

வத்திராயிருப்பு, டிச. 25: வத்திராயிருப்பில் வாறுகால் அடைப்பால் தெருக்களில் கழிவுநீர் தேங்கி பொதுமக்களுக்கு சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தியுள்ளது.
வத்திராயிருப்பில் உள்ள வணிக வைசியர் கீழத்தெரு, அல்லா கோயில் தெரு, சேடக்குடித்தெரு, முடுக்குத்தெரு, வெள்ளாளர் நடுத்தெரு ஆகிய தெருக்களில் வாறுகால்களை முறையாக தூர்வாராமல் தெருக்களில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதில், கொசுக்கள் உருவாகி, பொதுமக்களுக்கு சுகாதாரக்கேட்டை உருவாக்குகிறது. தெருக்களில் கழிவுநீர் தேங்கியிருப்பதால், அதில் நடக்கும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
9 மற்றும் 10வது வார்டுகள் வாறுகால் வழியாகச் செல்லும் கழிவுநீர், வில்வராயன்குளம் கண்மாய்க்கு செல்ல வேண்டும். ஆனால் வாறுகாலில் பாலித்தீன், கேரிப்பை உள்ளிட்ட குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வாறுகாலை தூர்வாருவதற்கு நடவடிக்கை இல்லை. வாறுகால் அடைப்பால், மழை காலங்களில் மழைநீரோடு, கழிவுநீரும் சேர்ந்து தேங்குகிறது. மேலும், இப்பகுதியில் உள்ள கழிவறை அருகே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. வில்வராயன் குளம் கண்மாய்க்கு செல்லும் பாதை குப்பையாக காட்சியளிக்கிறது. எனவே, 9-11 வார்டு தெருக்களில் உள்ள வாறுகாலை தூர்வாருவதற்கு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து திமுக முன்னாள் கவுன்சிலர் மாரிமுத்து கூறுகையில், ‘நகரில் உள்ள 9, 10, 11வது வார்டுகளில் வாறுகால்களை தூர்வாராததால், அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தெருக்களில் கழிவுநீர் தேங்குகிறது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. வில்வராயன்குளத்திற்கு செல்லும் வழி குப்பை மயமாக உள்ளது. நகரில் வாறுகால்களை தூர்வாருவதற்கும், குப்பைகளை அகற்றுவதற்கும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Jyotidh Rathna ,streets ,KP Vidyadharan ,
× RELATED மக்கள் போராட்டம் எதிரொலி:...