×

ஜல்லிக்கட்டு நடத்த தனிநபர்களுக்கு அனுமதி கொடுக்க கூடாது அவனியாபுரம் மக்கள் வலியுறுத்தல்

மதுரை, டிச. 25: அவனியாபுரம் கிராமம் சார்பில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
மதுரை அவனியாபுரம் கிராம பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கலெக்டர் நடராஜனிடம் கொடுத்த கோரிக்கை மனுவில்,‘அவனியாபுரத்தில் பல்வேறு சமூகத்தினர் உள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான இளைஞர், மகளிர் அமைப்புகள், சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் கிராம கமிட்டியை நியமித்து, கிராமம் சார்பில் தை முதல் நாள் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனி சமூகத்தினர், அல்லது தனிநபர்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிய வருகிறது. பல ஆண்டுகளாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டை கிராமம் சார்பில் நடத்த மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுக்க வேண்டும். தனி சமூகத்தினர், தனி நபர்களுக்கு அனுமதி கொடுக்க கூடாது. மேலும் மாவட்ட நிர்வாகம் விதிக்கும் கட்டுப்பாடுகளை ஏற்றும், ஜல்லிக்கட்டுக்கான வைப்பு தொகையை கட்டவும் நாங்கள் தயாராக உள்ளோம் என தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக ஆர்டிஓ விசாரிக்க கலெக்டர் பரிந்துரை செய்தார்.

Tags : individuals ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!