×

தொழில் துவங்குவதற்காக ஆன்லைன் மூலம் ரூ.60 ஆயிரம் மோசடி கலெக்டரிம் எலக்டீரிசியன் புகார்

திருப்பூர்,டிச.25: திருப்பூரில், யூ டியூப்பை பார்த்து எல்இடி‘பல்பு’ தயாரித்து விற்பனை செய்வதற்காக ஆன்லைன் மூலம் ரூ.60 ஆயிரம் இழந்த எலக்டீரிசியன் பணத்தை மீட்டு தரக் கோரி கலெக்டரிம் நேற்று மனு அளித்தார். திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்தவர் காஜா மைதீன் (42). இவர் நேற்று கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர், விஜயாபுரம் பகுதியில் எலக்டீரிக்கல் கடை நடத்தி வருகிறேன். புதிய தொழில் துவங்குவதற்காக  யூ டியூப்பை பார்த்த போது எல்இடி பல்பு தயாரித்து விற்பனை செய்வது குறித்த விளம்பரத்தை கண்டேன். அதில் கூறியபடி,எனது மொபைல் எண்ணை பதிவு செய்தேன். இதனை தொடர்ந்து இந்தியா.காம் என்ற இணைய வாயிலாக டெல்லியை சேர்ந்த அபி எண்டர்பிரைஸ் என்ற நிறுவனம் மொபைல் வாயிலாக தொடர்பு கொண்டது. பின்னர், எல்இடி பல்புகளை தயாரிக்கும் இயந்திரம், உபகரணங்கள் தருவதாகவும், அதை தாங்களே விற்பனைக்கு எடுத்து கொள்வதாகவும் கூறினர்.

 இதற்காக ரூ.60 ஆயிரம் முன் தொகை கட்ட வேண்டும் எனவும் கூறினர். இதனை, நம்பி ரூ.60 ஆயிரத்தை செலுத்தினேன். அவர்கள் வெறும் 200 பல்புகள் தயாரிப்பதற்கு அளவான மெட்டீரியல், மெஷின்கள் மட்டும் அனுப்பினர். பின்னர், மேலும், கூடுதலாக எல்இடி பல்புகளை தயாரிக்க மெட்டீரியல் பெறுவதற்காக தொடர்பு கொண்ட போது முறையான தகவல் தெரிவிக்க வில்லை. எனவே தான் கட்டிய பணத்தை திரும்ப பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Tags : collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...