×

காட்டுமன்னார்கோவில் அருகே கோமாரி நோய் தாக்கிய கால்நடைகளுக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை

காட்டுமன்னார்கோவில், டிச. 25: காட்டுமன்னார்கோவில் அடுத்த சிறுகாட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட சி.புத்தூர் கிராமத்தில் உள்ள கால்நடைகள் கோமாரி நோய் தாக்கத்துக்குள்ளாகி பலியாகி வருவதாக கடந்த வாரம் சனிக்கிழமை தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து இச்செய்தியின் எதிரொலியாக நேற்று சி.புத்தூர் கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள் முகாமிட்டு நோய் தாக்குதலுக்கு உள்ளான கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.மேலும் துப்புரவு பணியாளர்கள் சுகாதாரப்பணிகளையும் முடுக்கி விட்டுள்ளனர். தற்போது சுகாதார பணிகளை மேற்கொண்டு கால்நடைகளுக்கு தடுப்பு ஊசிகள் போடும் சுகாதார பணியாளர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

Tags : team ,Komari ,Vimanamarko ,
× RELATED கைப்பந்து போட்டியில் வெண்கல பதக்கம்...