×

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாத்தி சிறப்பு வழிபாடு

நாமக்கல், டிச.21: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் 100 ஆண்டுக்கு மேல் பழயைமான கோயிலாகும்.தமிழகம் மட்டும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆஞ்சநேயரை தரிசிக்க தினந்தோறும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஆஞ்சநேயருக்கு கட்டளைதாரர்கள் மூலம் வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. அதே போல இந்த மாதங்களில் ஆஞ்சநேயருக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.நேற்று ஆஞ்சநேயருக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆஞ்சநேயரை சுற்றி வந்தால் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பதால் தினமும் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலையில் கோயிலை சுற்றி வலம் வருகின்றனர்.

Tags : Namaskar Anjaneyar ,
× RELATED நாமக்கல்லில் மழை அளவு