×

நாட்டார்மங்கலம் கிராமத்தில் அஞ்சலக சேவை விழிப்புணர்வு

பாடலூர்,டிச.21:  ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் அஞ்சலக துறை யின் சார்பில் சேவைகள், பயன்பாடுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் அஞ்சல கத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாதாந்திர சேமிப்பு கணக்கு, குறித்த கால சேமிப்பு கணக்கு, பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டம், கிராமிய அஞ்சல் ஆய்வு காப்பீடு திட்டம் உட்பட அஞ்சலக துறையின்  சேவைகள் குறித்தும், பயன்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாட்டார்மங்கலம் அருட்செல்வன், இளங்கோவன், பெர கம்பி ஜம்புகேஸ்வரர், பொம்மனப்பாடி ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசி னர். மேலும் அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கி பொதுமக்கள் சேமிக்கும் பழக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.நாட்டார்மங்கலம் கிராம பொதுமக்கள் பங்கேற்று புதிய அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்கி பயனடைந்தனர். செட்டிகுளம் மற்றும் அதன் 9 துணை அஞ்சலகத்தை சேர்ந்த அஞ்சலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : village ,Natarmangalam ,
× RELATED வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்..!!