×

நாகை, திருவாரூர் மாவட்டத்தில் 11வது நாளாக விஏஓக்கள் வேலை நிறுத்தம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

நாகை.டிச.21: நாகை, திருவாரூர் மாவட்டத்தில் 11வது நாளாக விஏஓக்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று நாகை கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் அனைத்து கிராம நிர்வாக அலுவலகத்திற்கும் மின் வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்து தர வேண்டும். அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் கம்ப்யூட்டர் இணைய தள வசதி செய்து தர வேண்டும், காலி பணியிடம் உள்ளதால் பல கிராம நிர்வாக அலுவலர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பணிபுரிய வேண்டியுள்ளதால் காலியாக உள்ள அனைத்து காலி பணியிடங்
களை நிரப்ப வேண்டும்.

பட்டா மாறுதல்களை கிராம நிர்வாக அலுவலர் ஒப்புதல் பெற்ற பின்னரே  பட்டா மாறுதல் செய்ய வேண்டும்,  பெண் கிராம நிர்வாக அலுவலர்களின்  அவர்களின் சொந்த  மாவட்டத்தில் பணி புரிய மாறுதல்  வழங்க வேண்டும்,  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  நேற்றுடன் 11 வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.  நாகை, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தை சேர்ந்தவர்கள் நாகை மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நாகை கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் நாகை மாவட்ட துணை தலைவர் ஜாகிர்உசேன், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட  தலைவர் கதிர், மாவட்ட செய்தி தொடர்பாளர் செந்தில்குமார், மகளிர் அணி செயலாளர் ஜெயசுதா, நாகை மாவட்டத்தை சேர்ந்த வட்ட தலைவர்கள் நாகை மாரியப்பன், வேதாரண்யம் ரெங்கசாமி,  மயிலாடுதுறை திருமலைசங்கு, கத்தாலம் ஜெயபிரகாஷ், தரங்ம்பாடி பன்னீர்செல்வம், வட்ட செயலாளர்கள் கீழ்வேளூர் பிரபாகரன்,  சீர்காழி நவநீதம் உள்ளிட்ட 350 க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags : strike ,Kozhikode district ,Tiruvarur district ,
× RELATED திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!