×

நாகையை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை,டிச.21:  நாகை மாவட்டம் முழுவதையும் புயலால் பாதித்த மாவட்டமாக அறிவிக்க கோரியும் நாகை வடக்கு மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மரம், வயல்களை முறையாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்க கோரி விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் தலைவர் குருகோபிகணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் பொன்குமார் கண்டன உரையாற்றினார்.  

அவர் பேசுகையில்,’ கஜா புயலால் மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் நெல் கரும்பு வாழை தென்னை தேக்கு மா மரம் ஆகியவைகளை துரிதமாக கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் கடந்த ஆண்டுகளில் 2016-2017,2017-2018, 2018-2019 பிரீமியம் செலுத்திய விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகைகளை தங்குதடையின்றி உடனடியாக வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கி தனியார் வங்கி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நாகை மாவட்டம் முழுவதையும் புயலால் பாதித்த சிறப்பு பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கிராமந்தோறும் பொதுப்பணித்துறை மூலம் செயல்படுத்தி வரும் குடி மராமத்து பணிகளில் தகுதி வாய்ந்த விவசாயிகளை நியமிக்க வேண்டும் கஜா புயல் குறித்து எங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால், விவசாயிகளின் போராட்டம் தொடரும் என்றார்.  

Tags : Nagapattinam ,Farmers Association Demonstration ,calamity district ,
× RELATED நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில்...