×

பிளாஸ்டிக் தடை எதிரொலி பள்ளிகளில் செயல்வழி கற்றலில் தெர்மாகோல் பயன்படுத்தக்கூடாது தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை

வேலூர், டிச.21: பிளாஸ்டிக் தடை எதிரொலியாக பள்ளிகளில் செயல்வழி கற்றலில் தெர்மாகோல் பயன்படுத்தக் கூடாது என தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை அமலுக்கு வருகிறது.ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், பாலித்தீன் மற்றும் மறுசுழற்சியில் வராத, மக்காத பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம், இந்த திட்டத்தில் தடை செய்யப்படுகிறது. இதற்காக துறை வாரியாக, விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நொறுக்கு தீனி, மதிய உணவு போன்றவற்றை பிளாஸ்டிக் டப்பாக்களில் எடுத்து வரக்கூடாது.மறுசுழற்சி செய்ய முடியாத, தெர்மாகோல் போன்றவற்றை, வகுப்பறை செய்முறை கற்றலில் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் 1ம் தேதி முதல், பள்ளி வளாகத்தில், பிளாஸ்டிக் இல்லாத, பசுமை வளாகமாக மாற்ற வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Tags : chief editors ,echo schools ,
× RELATED பிளாஸ்டிக் தடை எதிரொலி பள்ளிகளில்...