×

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்ட விளக்க கூட்டம்

திருப்பூர், டிச.20:திருப்பூரில், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்புக்குழு சார்பில்  போராட்டங்களும் அதற்கான நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் குறித்த விளக்கக்கூட்டம் நேற்று நடந்தது. திருப்பூர், கோர்ட் வீதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.ஒருங்கிணைப்பாளர் சுந்திரமூர்த்தி முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அமல்ராஜ் தமிழக ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில துணை தலைவர் கனகராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் பால்ராஜ் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்கள் மூலம் கிடைத்துள்ள வெற்றிகள் குறித்தும் கோர்ட் நடவடிக்கைகளால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கிடைத்துள்ள பயன்கள் குறித்தும், போராட்டங்கள் எதற்காக நடத்தப்படுகிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துகள் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது. கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்புக்குழுவின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,
× RELATED இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்