×

ஜாக்டோ - ஜியோ ஆலோசனை கூட்டம்

ஈரோடு, டிச. 20:  ஈரோட்டில் ஜாக்டோ - ஜியோ ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் பாபு தலைமை வகித்தார். இதில் ஜக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் அவர் ஜாக்டோ - ஜியோ போராட்டம் குறித்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கின் நிலை மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசின் நிலைபாடு குறித்தும் விளக்கி பேசினார். மேலும் ஜனவரி 7ம் தேதிக்கு பிறகு நடைபெற உள்ள உயர் மட்ட ஆலோசனைக்கு பிறகு நமது முடிவு என்னவென்று தெரிவிக்கப்படும் என்றார். இந்த கூட்டத்தில், ஜாக்டோ - ஜியோ ஆசிரியர்கள், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Jacotto - Geo Consulting Meeting ,
× RELATED ஜாக்டோ - ஜியோ ஆலோசனை கூட்டம்