×

குன்றத்தூர் ஒன்றிய கிராமங்களில் வளர்ச்சி பணிகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு

பெரும்புதூர், டிச.20: குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ₹21.86 லட்சம் மதிப்பில், பசுமைக் குடில் நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டு மரம், செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. மேலும் ₹1.45 லட்சம் மதிப்பில் பண்ணை குட்டை, ₹2.45 லட்சத்தில் பழத்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.  இதேபோல் செரப்பணஞ்சேரி கிராமத்தில் ₹1.16 லட்சம் மதிப்பில் உறிஞ்சி குழி, வட்டம்பாக்கம் கிராமத்தில் குளம் பராமரிப்பு, கால்நடை குடிநீர் தொட்டி, நீர் தடுப்பணை, 14வது நிதிக்குழு மானிய நிதியில் ஆய்துளை கிணறு ஆகியன அமைக்கப்பட்டுள்ளது.  இதேபோன்று வளையங்கரணை கிராமத்தில் சாலை ஓரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இந்நிலையில் மேற்கண்ட வளர்ச்சி பணிகளை 2 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று முன்தினம் அப்பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, செயற்பொறியாளர் கவிதா, குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், சந்திரபாபு மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் மத்திய குழுவினர், இந்த திட்ட பணிகளை செயல்படுத்தும் முறையினைஅதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.


Tags : team ,village villages ,
× RELATED திறந்தநிலையிலான ‘ஊக்கை’ விழுங்கிய...