×

கெங்கவல்லி ஒன்றிய விசிக செயலாளர்

பதவி நீக்கம்செங்கவல்லி, டிச.19: திருச்சி மாநாட்டுக்கு நிதி கேட்டதாக போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததை அடுத்த, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கெங்கவல்லி ஒன்றிய செயலாளர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விடுதலை சிறுத்தை கட்சியின் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய செயலாளராக மனோகரன் இருந்துவந்தார். திருச்சியில் கட்சி சார்பில் நடைபெறும் “தேசம் காப்போம் மாநாட்டுக்கு” ஒன்றிய நிர்வாகிகள் யாரும் துண்டறிக்கை வைத்து நிதி கேட்கக்கூடாது என்று கட்சி தலைமை ஏற்கனவே அறிவித்துள்ளது.

ஆனால், மனோகரன், துண்டு அறிக்கை வைத்து, மாநாட்டு நீதி கேட்டதாக, கெங்கவல்லி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மனோகரனை கெங்கவல்லி ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் முத்து தெரிவித்துள்ளார்.

Tags : Kankavalli ,Union Vice Secretary ,
× RELATED கெங்கவல்லியில் 5 நாட்கள் ஜமாபந்தி கூட்டம்