×

அரிமளம் அருகே கீரணிப்பட்டியில் நிவாரணம் கேட்டு மக்கள் மறியல்

திருமயம், டிச.19: அரிமளம் அருகே நிவாரணம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் செய்ததால்  ஒன்றரை மணி  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக புயலால் பாதித்த மக்களுக்கு அரசு வழங்கும் 27 பொருட்கள் அடங்கிய நிவாரணம் அதிகாரிகள், போலீசார் உதவியோடு வழங்கப்பட்டு வருகிறது.நேற்று திடீரென  நிவாரணம் வழங்க கோரி கீரணிப்பட்டி, மடத்துப்பட்ட மக்கள் கீரணிப்பட்டி ஆர்ச் எதிர்புறம் அரிமளம்-அறந்தாங்கி சாலையில் மறியல் செய்தனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கே.புதுப்பட்டி போலீசார் மறியல் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். நாளை பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ஐ அலுவலகத்திற்கு சென்று மனு கொடுங்கள்; அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்து உங்கள் போராட்டத்தை தொடரலாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அரிமளம்-அறந்தாங்கி சாலையில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே போல் அதே கோரிக்கையை வழியுறுத்தி அரிமளம் அருகே உள்ள மிரட்டுநிலையில் நடைபெற்ற சாலை மறியலில் சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். ஓணாங்குடி கிராம மக்கள் சாலைமறியல் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் ரமேஷ், டிஎஸ்பி தமிழ்மாறன் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக சமாதானம் செய்துள்ளனர்.

Tags : hearing ,Arimala ,Kiranipatty ,
× RELATED முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும்...