×

ரூ.116 கோடியில் திருநள்ளாறு தொகுதி மேம்படுத்தப்படும் புதுச்சேரி வேளாண் அமைச்சர் தகவல்

காரைக்கால், டிச.19:  காரைக்கால் வட்டார வளர்ச்சி துறை மூலம், மத்திய அரசின் ரூபன் திட்டத்தின் மூலம், நகர்ப்புற வசதிகளை போல கிராமப்புறங்களையும் மேம்படுத்துவதற்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில்  நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை வகித்து பேசியது: மத்திய அரசின் ரூர்பன் திட்டத்தின் மூலம் நகர்புறங்களில் உள்ள வசதிகளை போல கிராம புறங்களையும் மேம்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசு அளித்த ரூ.30 கோடியும், புதுச்சேரி அரசு சார்பில் அளிக்கப்பட்ட ரூ.86 கோடியும் என மொத்தம் ரூ.116 கோடி செலவில் மூன்று ஆண்டுகளில் திருநள்ளாறு சட்டமன்ற தொகுதியை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள பெறப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் திருநள்ளாறு சட்டமன்ற தொகுதியில் 24 மணி நேரமும் குடிநீர் வசதி, மின்சார வசதி, ரோடு வசதி மற்றும் இதர அடிப்படை வசதிகளை செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தில் திருநள்ளாறு சட்டமன்ற தொகுதியில் ஏழு இடங்களில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது. திருநள்ளாறு கோயிலுக்கு வரும் வயதான பக்தர்களுக்கு பேட்டரி கார் வசதி செய்து கொடுக்கவும், விவசாயிகளுக்கு விவசாய பொருட்களை தயாரித்தல், பால் பதப்படுத்தப்படும் இடம் அமைத்தல் மற்றும் தீவனங்களை அரசே தயார் செய்து வழங்குதல் போன்ற திட்டங்கள் அடங்கும். தற்போது 10 இடங்களில் சுமார்ட் வகுப்புகள் வசதி உள்ளது. இதனை மேலும் 20 இடங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுவரை போடப்படாத இடங்களில் சாலை வசதிகள் செய்வதற்கும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. என்றார்.

Tags : Puducherry ,Agriculture Minister ,Tirunallar ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை