×

உடுமலை பகுதியில் விதைச்சான்று உதவி இயக்குனர் ஆய்வு

உடுமலை, டிச. 19: உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விதைப்பண்ணைகள், தனியார் மற்றும் அரசு விதைச்சுத்தி நிலையங்களில் கோவை, விதைச்சான்று உதவி இயக்குனர் ஆர்.சிவக்குமார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். உடுமலை அருகே உள்ள ஆண்டியக்கவுண்டனூர், கிழுவன்காட்டூர், ஜக்கம்பாளையம் பகுதியில் உள்ள உளுந்து, பாசிப்பயறு, தினை, ஆதார நிலை விதைப்பண்ணைகளில் ஆய்வு செய்து, விவசாயிகளுடன் கலந்துரையாடினார். விதைப்பண்ணை ஆய்வின்போது, வயல் தரம் மற்றும் விதை தரம் பராமரிக்கப்படுகிறதா எனவும் அதற்கான சாகுபடி குறிப்புகள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நெல், உளுந்து மற்றும் பிற விதைகளை ஆய்வு செய்தார்.
இதேபோல், குடிமங்கலம் வட்டாரத்தில் உள்ள சைமா எனப்படும் பருத்தி விதை சுத்திகரிப்பு மற்றும் சான்றளிப்பு நிலையத்திலும், மடத்துக்குளம், கணியூர், காரத்தொழுவு பகுதியிலும் ஆதார நிலை விதைப்பண்ணைகளில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது விதைச்சான்று அலுவலர்கள் விமலா, சர்மிளா, ஹேமலதா, ராஜேஸ்வரி உடனிருந்தனர்.

Tags : Assistant Director ,area ,Uthumalai ,
× RELATED கோடை வெயிலில்குறைந்த நீரை...