×

கூடலூர் அருகே கிராமத்தில் பாக்கு மட்டை தயாரிப்பு திட்டத்திற்கு ரூ.2 லட்சம் நிதி உதவி கலெக்டர் வழங்கினார்

ஊட்டி, டிச. 19: ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கோத்தகிரி வட்டம் மிஷன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பிரியா என்பவருக்கு பெட்டி கடை வைக்க கலெக்டரின் விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.30 ஆயிரத்திற்கான காசோலை, பந்தலூர் வட்டம் இரும்பு பாலம் கிராமத்தை சேர்ந்த மூளை வளர்ச்சி குன்றிய ரஞ்சினி என்பவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கூடலூர் அருகேயுள்ள செருமுள்ளி கிராமத்தை சேர்ந்த பெட்டக்குரும்பர் சமுதாய நல சங்கத்திற்கு பாக்குமட்டை தயாரிக்கும் திட்டத்திற்காக, ரூ.2 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அங்கன்வாடி பணியாளர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 6 அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தும்மனட்டி கிராம பஞ்சாயத்து சார்பில், ரூ.65 ஆயிரம் நிவாரண நிதி, ரூ.35 ஆயிரத்திற்கான நிவாரண பொருட்கள் ஆகியவற்றை தும்மனட்டி கிராம தலைவர் லட்சுமணன், தும்மனட்டி கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சி வினோத் ஆகியோர், கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் ஒப்படைத்தனர். இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் முருகன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிவேலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : collector ,village ,Kodalur ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...