×

டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் பெண் தொழில் முனைவோர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கும்மிடிப்பூண்டி,டிச.19: கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் உள்ள டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கும்  விழிப்புணர்வு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதற்கு டி.ஜெ.எஸ். கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். டி.ஜெ.எஸ் கல்வி குழும இயக்குனர் ஜி.தமிழரசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட குமார் லைம்லைட் கன்சல்டன்சி நிறுவன இயக்குனர் பி.கே.குமாரதேவன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஓய்வு பெற்ற முதன்மை மேலாளர்கள் லோகநாதன், ஜெயப்பிரகாஷ், ராஜேந்திரன் ஆகியோர் பெண்களுக்கான சிறு,குறு தொழிலகங்கள் துவக்குதல், வங்கி கடனுதவி பெறும் முறைகளை விளக்கினர்.

 தமிழகத்தில் இளம் பெண் தலைமை செயல் அலுவலரான காக்னிசர் டெக்னாலஜிஸ் நிறுவன தலைமை செயல் அலுவலர் ஆர்.ராகவியா சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து விழாவில் பேசிய டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் பேசுகையில், இந்த ஆண்டு டி.ஜெ.எஸ் கல்வி குழுமம் சார்பாக நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு 4ஆண்டு அனைத்து வசதிகளுடன் இலவச கல்வி உள்ளிட்ட ரூபாய் 75 லட்சம் வரை உதவித் தொகை டி.ஜெ.சிவானந்தம் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது. வரும் கல்வி ஆண்டு ஒன்றரை கோடி அளவில் கல்வி உதவி தொகை வழங்கப்பட உள்ளது என்றார்.  முடிவில் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரி நிர்வாக அலுவலர் ஏழுமலை நன்றி தெரிவித்தார்.

Tags : DJS Engineering College ,
× RELATED பெருவாயல் பகுதியில் டி.ஜெ.எஸ்...