×

முத்தூர் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.1.51 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

வெள்ளக்கோவில், டிச.16:வெள்ளக்கோவில் அடுத்துள்ள முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் டெண்டர் முறையில் தேங்காய் ஏலம் நடைபெருகிறது. முத்தூர் சுற்று வட்டார விவசாயிகள் 103 பேர் நேற்று விற்பனை கூடத்திற்கு 13 ஆயிரத்து 494 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ 34.10 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 26.15 ரூபாய்க்கும், சராசரி 32.75  ரூபாய்க்கும் ஏலம் போனது. 4 டன் தேங்காய்கள் மொத்தம் 1 லட்சத்து ரூ.51 ஆயிரத்து 864 க்கு ஏலம் போனது என, விற்பனைகூடமேற்பார்வையாளர் ஸ்ரீரங்கன் தெரிவித்தார். கடந்த வாரத்தை விட நேற்று கிலோவுக்கு ரூ.5 அதிகமாக விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1.75 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது. முத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 1886 கிலோ தேங்காய் பருப்புகள் வந்திருந்தன. ஏலத்தில் அதிக பட்சமாக ஒரு கிலோ 108.40  ரூபாய்க்கும், குறைந்த விலையாக 52.30 ரூபாய்க்கும் ஏலம் போனது. 1886 மொத்தம் கிலோ அளவுள்ள தேங்காய் பருப்பு 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

Tags : Muthur Regulatory Board ,
× RELATED முத்தூர் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.1.85 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்