பள்ளிகளில் தேர்வுகள் துவங்குவதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

ஊட்டி, டிச. 16:  வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊட்டி சுற்றுலா  தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.     ஆனால், தேர்வு  சமயங்களில் மட்டும் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தே  காணப்படுகிறது. தற்போது ஒரு சில பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள்  துவங்கியுள்ளன. சில பள்ளிகளில் வரும் வாரத்தில் துவங்குகிறது. தேர்வு சமயம்  என்பதால், பெரும்பாலான மக்கள் ஊட்டி வருவதை தவிர்த்துள்ளனர். குறிப்பாக, அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநில சுற்றுலா  பயணிகள் வருவது குறைந்துள்ளது. இதனால், வழக்கமாக வார விடுமுறை நாட்களில்  சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டும் தாவரவியல் பூங்காவில் நேற்று  கூட்டம் குறைந்தே காணப்பட்டது. இம்மாதம் இறுதி வாரத்தில் தேர்வு  விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை வரும் நிலையில்,  சுற்றுலா பயணிகள் அதிகம் வர வாய்ப்புள்ளது.

× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண்...