×

திருவண்ணாமலை, செய்யாறில் விழா 4,300 பயனாளிகளுக்கு ₹25 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி அமைச்சர் வழங்கினார்

திருவண்ணாமலை, டிச.16: திருவண்ணாமலை, செய்யாறில் சமூக நலத்துறை சார்பில் 4300 பயனாளிகளுக்கு ₹25 கோடி மதிப்பிலான திருமண நிதி உதவியை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.திருவண்ணாமலையில் சமூக நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி தொகை வழங்கும் விழா வேங்கிக்காலில் நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். எம்பி வனரோஜா, எம்எல்ஏ தூசி கே.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.பின்னர் 2,258 பயனாளிகளுக்கு ₹7.90 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி உட்பட மொத்தம் ₹13.40 கோடி மதிப்பில் நிதியுதவி வழங்கி அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் பேசினார்.அதேபோல், செய்யாறு, அனக்காவூர், வெம்பாக்கம், ஆரணி, மேற்கு ஆரணி, சேத்துப்பட்டு, பெரணமல்லூர், வந்தவாசி, தெள்ளார் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த 2,042 பயனாளிகளுக்கு சமூக நலத்துறை சார்பில் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நிதி, தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கிறிஸ்டினா தா.டார்த்தி தலைமை தாங்கினார். ஆரணி எம்பி செஞ்சி வெ.ஏழுமலை முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன் ஆகியோர் 2042 பயனாளிகளுக்கு நிதி உதவியாக ₹7 கோடி 21 லட்சத்து 25 ஆயிரம் தாலிக்கு தங்கம் (8 கிராம்), ₹4 கோடியே 97 லட்சத்து 65 ஆயிரத்து 582 என மொத்தம் ₹12 கோடியே 19 லட்சம் நிதியுதவி தாலிக்கு தங்கம் வழங்கினர்.திருவண்ணாமலை மற்றும் செய்யாறில் சமூக நலத்துறை சார்பில் நேற்று நடந்த விழாவில் மொத்தம் 4,300 பயனாளிகளுக்கு ₹25 கோடி மதிப்பிலான திருமண நிதி உதவி வழங்கப்பட்டது.

Tags : Minister ,Tiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலை கோயில் வழக்கை சிறப்பு...