×

கிராம நிர்வாக அலுவலர்கள் 2வது நாளாக போராட்டம்

நாகர்கோவில், டிச.12: குமரியில் 2வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நடைபெற்றது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணி இடங்களில் கூடுதல் ெபாறுப்பு வழங்கினால், அதற்கு கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும்.  இணைய தள வசதி செய்து தர வேண்டும். வெளி மாவட்ட மாறுதல் கலந்தாய்வு வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன்படி 3வது கட்டமாக மக்களை தேடி என்ற போராட்டத்தை நேற்றுமுன்தினம் முதல் தொடங்கியுள்ளனர். 2வது நாளாக நேற்றும் விடுப்பு எடுத்துக் கொண்டு மக்களிடம் துண்டு பிரசுரம் மூலம் தங்களது கோரிக்கைகளை விளக்கி ஆதரவு திரட்டினர். கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் காரணமாக சான்றிதழ் வழங்குதல் உள்பட பல்வேறு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.


Tags : Village administration officials ,
× RELATED கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்த...