லாரி மோதி வாலிபர் பலி

புழல், டிச. 11;சோழவரம் அடுத்த சோத்து பெரும்பேடு, லட்சுமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி (38) இவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்,  நேற்று முன்தினம் காரனோடை அம்பேத்கர் நகர், நெற்குன்றம் செல்லும் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி மோதியதில் கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ரவி இறந்தார். ரவிக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். புகாரின்படி சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>