×

காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில் வணிக வளாகம் கட்டுமான பணி எம்எல்ஏ ஆய்வு

காரைக்கால், டிச.5: காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில், மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெற்று வரும் வணிக வளாக கட்டுமானப்பணியை தொகுதி எம்எல்ஏ கீதா ஆனந்தன் ஆய்வு செய்தார். காரைக்கால் திருமலைராயன்பட்டின கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமான காந்தி மார்க்கெட் மிகவும் பழமை வாய்ந்ததால், அதனை இடித்துவிட்டு புதிய வணிக வளாகம் கட்டித்தரவேண்டும் என அப்பகுதி வணிகர்கள், தொகுதி எம்எல்ஏ கீதாஆனந்தனிடம்  கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், எம்எல்ஏ கீதா ஆனந்தன் புதுச்சேரி மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணனிடம் பேசி ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இந்த நிதியில், பழைய காந்தி மார்க்கெட் இடிக்கப்பட்டு புதிய வணிக வளாகம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியை எம்எல்ஏ கீதாஆனந்தன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, வணிக வளாகத்தின் ஒரு பகுதியில் மாடி பகுதிக்கு செல்ல படிக்கட்டுகள் கட்டப்படுவதை பார்த்து, இந்த படிக்கட்டை அகற்றிவிட்டு,கட்டிடத்தின் ஓரமான பகுதியில் படிக்கட்டு அமைத்தால், கூடுதலாக ஒரு கடை கட்டலாம். இதற்கான கூடுதல் நிதியை புதுச்சேரி அரசிடமிருந்து பெறத்தர ஏற்பாடு செய்வதாகவும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜான் அரேலியஸ் மற்றும் பொறியாளர் குழுவினரிடம் எம்.எல்.ஏ ஆலோசனை வழங்கினார்.

Tags : MLA ,premises ,Karaikal Thirumalaiyarayanapattinam ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு :...