×

தாந்தோணிமலை-ஏமூர் சாலையில் சேதமடைந்த டிரான்ஸ்பார்மர் மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை

கரூர், டிச. 5:  கரூர் தாந்தோணிமலையில் இருந்து ஏமூர் செல்லும் சாலையில் எந்த நேரமும் விழும் நிலையில் சிதிலடைந்துள்ள டிரான்ஸ்பாரை தாக்கிக் கொண்டிருக்கும் மின்கம்பங்கலை மாற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை முத்துலாடம்பட்டியில் இருந்து ஏமூர், காந்திகிராமம் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கான சாலை உள்ளது. இந்த சாலையோரம் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதில், சுகுணா நகர்ப்பகுதிக்கு செல்லும் பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு மின்சப்ளை வழங்கப்பட்டு வருகிறது.

டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்துள்ள நிலையில், சிமெண்ட் துகள்கள் அனைத்தும் விழுந்து மிகவும் மோசமான நிலையில் இந்த டிரான்ஸ்பார்மர் உள்ளது. தொடர்ந்து வரும் மழைக்காலத்தினை மனதில் வைத்து, இந்த டிரான்ஸ்பார்மரை மாற்றுவதற்கான மாற்று ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : road ,Tandonimali-Eumoor ,
× RELATED திருச்சி – சிதம்பரம் சாலை பூவளூரில்...