×

புத்திரன்கோட்டை ஊராட்சியில் புதர் மண்டிய அரசு பள்ளி வளாகம்

செய்யூர், டிச. 5: புத்திரன்கோட்டை ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளி வளாகம் புதர்மண்டி காணப்படுவதால் விஷ ஜந்துக்கள் வசிப்பிடமாக மாறியுள்ளது. இதனால், மாணவர்கள் அச்சத்துடன் பயின்று வருகின்றனர். சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புத்திரன்கோட்டை ஊராட்சியில், மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு சாலையோரம் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், சுற்றுப் பகுதிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.  சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பள்ளி வளாகம் முன்பு நீர்பிடிப்பு குட்டையாக இருந்து.  இந்த குட்டை தூர்க்கப்பட்டு பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால், முறையாக குட்டை தூர்க்கப்படாததால் பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன.

பள்ளியின் முகப்பு பகுதியில் மைதானம் அமைக்கப்பட வேண்டிய இடம் கூட பள்ளமாக உள்ளது. இதனால், மழைக்காலங்களில் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. மேலும், தற்போது பள்ளி வளாகம் முழுவதும் செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது.  
கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் அங்குள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் கொசு உற்பத்தி அதிகரித்து வருவதுடன், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவை அடிக்கடி வகுப்பறைக்குள் புகுந்துவிடுவதால், மாணவர்கள் அச்சத்துடன் பயின்று வருகின்றனர்.  மேலும், பள்ளியில் கழிப்பறை அமைந்துள்ள பகுதியிலும் செடி கொடிகள் படர்ந்து காணப்படுவதால், மாணவ மாணவியர் கழிவறையை பயன்படுத்த அச்சப்படும் நிலை உள்ளது. பள்ளி வளாகத்தில் விளையாடகூட முடியாத அவலம் உள்ளது.

 இப்பகுதி அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் பலமுறை மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளங்களை மூடவும், புதர்களை அகற்றி முறையாக பராமரிக்கவும் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : school bus terminus ,town ,Putrakundu ,
× RELATED ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய நீலநிற டவுன் பேருந்துகள் இயக்கம்