×

அரசு மருத்துவர்கள் போராட்ட அறிவிப்பால் புறநோயாளிகள் சிகிச்சைக்கு மாற்று ஏற்பாடு அரசு மருத்துவமனை பொறுப்பு டீன் தகவல்

மதுரை, டிச. 4: அரசு மருத்துவர்கள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அரசு பணியில் இல்லாத பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் மூலம் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என மதுரை அரசு மருத்துவமனை டீன் பொறுப்பு சண்முகசுந்தரம் தெரிவித்தார். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், அரசு மருத்துவமனைகளில் இன்று (டிச.4) புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை என அறிவித்திருந்தனர். இது குறித்து அரசு மருத்துவமனைகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால், அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினசரி 4 ஆயிரம் பேர் வரை வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். அரசு மருத்துவர்கள் போராட்டத்தால், புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து மதுரை அரசு மருத்துவமனை, பொறுப்பு டீன் சண்முகசுந்தரம் கூறுகையில், ‘புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை புறக்கணிக்க யாருக்கும் அனுமதியில்லை. ‘மருத்துவப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் அரசு பணியில் உள்ள பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள்தான் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக தெரிகிறது. எனவே, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அரசு பணியில் இல்லாத பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களை வைத்து, புறநோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்’’ என்றார்.

விமான நிலையத்திற்கு  மூன்று அடுக்கு பாதுகாப்பு
* தென்மாவட்டங்களில் முக்கியமான இடமாக மதுரை விமான நிலையம் உள்ளது. தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய விஐபிகள் வந்து செல்வதால் உள்ளூர் போலீசாருடன், மத்திய பாதுகாப்பு படை வீரர்களுடன் இணைந்து 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Tags :
× RELATED மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றியவர்கள் கைது