×

ஜெயங்கொண்டம் அருகே தரைப்பாலத்தில் உடைப்பு வாகன ஓட்டிகள் அவதி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

ஜெயங்கொண்டம், டிச.4: ஜெயங்கொண்டம் அருகே தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். பாலத்தை சீரமைக்ககோரி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள அமிர்தராயன்கோட்டை கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் பொதுமக்கள் எந்த ஒரு பொருட்கள் வாங்குவதற்கும் வெளியூர்தான் சென்று வர வேண்டும். 8 கிமீ தொலைவில் உள்ள தா.பழுர் அல்லது 12 கி.மீ தொலைவிலுள்ள ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களுக்கு தான் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளிக்கவேண்டும். பள்ளிக்கு செல்வதென்றால் கோடாலிகருப்பூர் அல்லது தா.பழூர் சென்று தான்
படித்து வரவேண்டும்.

இந்நிலையில் அமிர்தராயன்கோட்டையிலிருந்து தேவாமங்கலம் செல்லும் வழியில் மழை நீர் வாய்க்காலில் கட்டப்பட்ட தரைப்பாலம் ஒன்று சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த தரைப்பாலத்தில் சிமெண்ட் கான்கிரீட் காரைகள் பெயர்ந்து விழுந்து பாலம் ஓட்டை விழுந்துள்ளது. இவ்வழியாக வெளியூர் சென்று வருபவர்களும் வெளியூர் செல்பவர்கள் இரவு நேரங்களில் செல்லும் போது தவறி விழுந்து விடுகின்றனர். இந்நிலையில் சிலர் அருகே வயலில் கிடைக்கும் மரக்கட்டைகளை எடுத்து குழியில்மேல் அடுக்கி வைத்துள்ளனர். யாரும் விழாமல் இருப்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இதையும் மீறி இரவில் சைக்கிளில் செல்வோர்கள் கட்டையில் மோதி விழுந்துள்ளனர். விவசாயிகள் தங்களது நிலங்களில் விளையக்கூடிய பயிர்களை மாட்டு வண்டிகளிலோ, இருசக்கர வாகனத்திலோ ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய முடியவில்லை. மாட்டு வண்டியில் செல்லும்போது பாலம் உள்வாங்கினால் மாட்டுவண்டி உடைந்துவிடும் என்பதற்காக தற்போது சோழமாதேவி, அனைக்குடம் வழியாக பத்து கிலோமீட்டர் தூரம் சுற்றி ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகையால் உயிர்பலி வாங்கும் முன் உடனே பாலத்தை சீரமைத்து பொதுமக்களை காத்திட வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : motorists ,breakup ,ground ,Jayankondam ,
× RELATED சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி...