×

முத்தூர் ஆட்டுச் சந்தை மூடல்

வெள்ளக்கோவில், நவ.30: முத்தூரில் நடந்து வந்த ஆட்டுச்சந்தை வரும் 1ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகிறது.
முத்தூரில்  சனிக்கிழமைதோறும் ஆட்டுச் சந்தை நடந்து வருகிறது. சுற்றுப் பகுதியில்  இருந்து விவசாயிகள் ஆயிரக்கணக்கான செம்மறி, வெள்ளாடுகளை விற்பனைக்கு கொண்டு  வருவார்கள். திருப்பூர், ஈரோடு, சேலம், கருர் மாவட்ட பகுதிகளை  சேர்ந்தவர்கள், ஆட்டுச் சந்தையில் ஆடுகளை பேரம் பேசி வாங்கி செல்வார்கள்.  திருப்பூர் மாவட்டத்தில் தற்போது கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல்  பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அங்கு அனைத்து கால்நடை சந்தைகளும் 2  வாரங்களுக்கு மூட கலெக்டர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.அதேபோல்,  முத்தூர் பேரூராட்சி நிர்வாகத்தின்கீழ் செயல்படும் ஆட்டுச் சந்தை வரும் 1ம்  தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என பேருராட்சி நிர்வாகம்  அறிவித்துள்ளது.

Tags : Muthur Sheep Market ,closure ,
× RELATED மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை...