×

ஹில்டன் பள்ளிக்கு தூய்மை பள்ளி விருது

தென்காசி, நவ. 29:  பழையகுற்றாலம் ஹில்டன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளிக்கு தமிழக அரசின் தூய்மை பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசின் சார்பில் மாவட்ட அளவிலான தூய்மை பள்ளிக்கான விருது வழங்கும் விழா நடந்தது. இதில் பழையகுற்றாலம் ஹில்டன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியும் தேர்ந்தெடுக்கப்பட்டு தூய்மைப்பள்ளிக்கான விருது மற்றும் ரொக்கப்பரிசினை மாவட்ட கலெக்டர் ஷில்பா வழங்கினார். தலைமை ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மற்றும் மாணவர் அகிலன் விருதினை பெற்றுக்கொண்டனர். பள்ளி தாளாளர் ஆர்.ஜெ.வி.பெல், செயலர் கிரேஸ்கஸ்தூரி பெல், முதல்வர் ராபர்ட்பென் ஆகியோர் விருது பெற காரணமாக இருந்த ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகளை பாராட்டினர்.

Tags : Hilton School ,
× RELATED அடையாளம் தெரியாத முதியவர் உடல் மீட்பு